அரோகரா கோஷத்துடன் பூம்பாறை வேலப்பர் கோயிலில் தேரோட்டம்
கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் நடந்தது.பழநி முருகன் கோயில் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் விழா பிப்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி நகர் வலம் வருதல் நடந்தது.இதை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. தேர் நிலையில் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனாக செலுத்தினர். இதை தொடர்ந்து பக்தர்கள் அங்கபிரதட்சணம், காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.