உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் சப்ளையை சீர்குலைக்க சதி; மின் இணைப்பை துண்டித்து நாசம்

குடிநீர் சப்ளையை சீர்குலைக்க சதி; மின் இணைப்பை துண்டித்து நாசம்

வடமதுரை : பிலாத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் குடிநீர் சப்ளையை சீர்குலைக்கும் நோக்கில் மர்ம நபர்கள் ஆழ்துளை கிணறு மின்மோட்டார்களின் மின் இணைப்புகளை துண்டித்துள்ளனர்.பிலாத்தில் மந்தை குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீரே உள்ளூர் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை நீர்த்தொட்டி இயக்குபவரான சாதிக் அலி மின் மோட்டார்களை இயக்க 'சுவிட்ச்' களை ஆன் செய்தார். ஆனால் இயங்கவில்லை. இதையடுத்து நேற்று காலை ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்த போது மூன்றில் தலா ஒரு அடி நீளம் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ஊராட்சி நிர்வாகத்தின் குடிநீர் சப்ளையை சீர்குலைக்கும் நோக்கில் மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஊராட்சி தலைவர் பத்மா வடமதுரை போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ