உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராம்சன்ஸ் மாணவருக்கு விருது

ராம்சன்ஸ் மாணவருக்கு விருது

நத்தம்: -நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் சுஜய். இவரது அம்மா ஜெயமணி வேம்பார்பட்டியில் நுாலகராக உள்ளார். தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் திண்டுக்கல்லில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1330 குறளையும் பிழையின்றி ஒப்புவித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து இவருக்கு திருப்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் சாமிநாதன் ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாணவர் இலக்கியச் சுடர் விருது, பசுமைக்காவலர் விருது, திருக்குறள் தொண்டர் விருது, யோகாவில் ஜாக்கி உலக சாதனை விருது, இளம் தமிழ் பேச்சாளர் விருது, கலாம் உலக சாதனை விருது என 35க்கு மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். மாணவரை ராம்சன்ஸ் பள்ளி தாளாளர் ராமசாமி , ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை