உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வளர்பிறை அஷ்டமி பூஜை

வளர்பிறை அஷ்டமி பூஜை

நத்தம்: - நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோயிலில் வாராஹி அம்மன் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாராஹி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகம்,சிறப்பு தீபாராதனை நடந்தது. வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை