உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் 15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல்லில் 15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகள், வீடுகள், கோடவுன்களில் பதுக்கி வைத்திருந்த 15 டன் தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் அதை அழித்தனர்.திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதி கடைகள், வீடுகள், கோடவுன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த தடை புகையிலை பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 6 மாதமாக தொடர்ச்சியாக நடந்த இதன் நடவடிக்கையால் 15 டன் தடை புகையிலை பொருட்கள் சேகரமானது. இதை அழிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் குப்பை கிடங்கில் 10 அடி ஆழத்தில் கொட்டி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை