உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு ரூ.18 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் பூங்கொடி பேச்சு

மாணவர்களுக்கு ரூ.18 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் பூங்கொடி பேச்சு

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் 2023 கல்வியாண்டில் மாணவர்களுக்கு ரூ.18 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது''என, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி பேசினார்.திண்டுக்கல் ஜி.டி.என்.,கல்லுாரியில் நடந்த கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் அவர் பேசியது: பொறியியல், மருத்துவம், வேளாண்,தோட்டக்கலை கல்லுாரி, கால்நடை மருத்துவக் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் கல்விக் கடனுதவி பெற்று பயன்பெறலாம். தகுதியுள்ள அனைவருக்கும் கடனுதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் கடன் பெறுவதற்கென உள்ள இணைதளம் www.vidyalakshmi.co.inவிண்ணப்பித்து பெறலாம். கடந்த கல்வி ஆண்டில் மாவட்டம் முழுவதும் பல்வேறு வங்கிகள் சார்பில் 300க்கு அதிகமான மாணவர்களுக்கு ரூ. 18 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்களை நன்கு கவனித்து தங்கள் உயர்கல்விக்கு தேவையான அறிவுரைகளை பயன்படுத்தி உயர்கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.எஸ்.பி., பிரதீப், முன்னிலை வகித்தார். ஆர்.டீ.ஓ., சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் பிரபாவதி, கல்லுாரி தாளாளர் ரத்தினம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் அருணாச்சலம் பங்கேற்றனர். பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நத்தம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்துவர 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 2000க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அண்ணா பல்கலை., அரசு,தனியார் கல்லுாரிகள் சார்பில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, தொழில்படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பாக 15க்கு அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ