மேலும் செய்திகள்
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 232 மாணவர்கள் ஆப்சென்ட்
04-Mar-2025
திண்டுக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சேர்ந்த 9,965 மாணவர்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 21,042 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதுதவிர தனித் தேர்வர்களாக 273 பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று தேர்வை 9,759 மாணவர்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 20,659 பேர் எழுதினர். 206 மாணவர்கள், 177 மாணவிகள் என மொத்தம் 383 மாணவர்கள் தேர்வெழுதவில்லை. தேர்வு மையங்களை கண்காணிக்க 140க்கு மேற்பட்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டது. திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை கலெக்டர் சரவணன் ஆய்வுசெய்தார்.
04-Mar-2025