மேலும் செய்திகள்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
21-Aug-2024
பழநி: பழநி ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போலீசை தாக்கிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் துரைராஜ் 33. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆர்.எப். ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டார். பழநி அடிவாரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். பழநி டவுன் போலீசார் அடிவாரம் பகுதியை சேர்ந்த மாதேஷ் 23, பிச்சைமணி 25, பிரபு 23, அரவிந்த் 24, மதன்ராஜ் 21, ராமச்சந்திரன் 23, குணா 24, கட்டளைமாரிமுத்து 24, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
21-Aug-2024