| ADDED : மே 26, 2024 04:53 AM
தேர்வு மையத்திற்கு புத்தகங்கள்ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி அரசு போட்டி தேர்வு பயிற்சி மைய நுாலகத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவரான தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ் தனது பிறந்த நாளை முன்னிட்டு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை அமைச்சர் சக்கரபாணியிடம் வழங்கினார்.வேன் மோதி பலிதாடிக்கொம்பு: கள்ளிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் 55. மதுரை ஆரப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டைம் கீப்பராக வேலை பார்த்து வந்தார். பணி முடிந்து இரவு தாடிக்கொம்பு வந்தவர் தனியார் நூற்பாலை அருகே நடந்து சென்றார். பின்னால் வந்த மினி வேன் மோதியது. மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். விழிப்புணர்வுநத்தம்: புன்னப்பட்டியில் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. செம்பட்டி ஆர்.வி.எஸ்., தோட்டக்கலை கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் சினேகா, சுபலெட்சுமி, சுபானு, தாமரைசெல்வி, சுபஸ்ரீ , தேசிகா கால்நடைகளில் உள்ள புற ஓட்டுண்ணிகளை இயற்கையான முறையில் நீக்குவது பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.