மேலும் செய்திகள்
குப்பையை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரிப்பு
21-Feb-2025
முடங்கிய மகளிர் வளாகம் : நிலக்கோட்டை விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடுன்றி உள்ளது. அப்பகுதி மக்கள் சிரமப்படும் நிலையில் வளாகத்தை சீரமைக்க வேண்டும்.-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.கழுதைகளால் அவதி : பழநி உழவர் சந்தை ரோட்டில் நடுவே கழுதைகள் சுற்றுகிறது. இது அடிக்கடி ஒன்றோடு ஒன்று சண்டை இடுவதால் ரோட்டை கடக்கும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகினறனர். இதை தடுக்க வேண்டும்.-முகமதுஜின்னா, பழநி.தெருவிளக்கு இன்றி இருள் : ஆத்துார் அக்கரைப்பட்டியில் தெருவிளக்கு எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது. இங்கு விஷ பூச்சிகள் அதிக அளவில் வருவதால் மக்கள் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதை சீர் செய்யவேண்டும்.-பிரபாகரன், அக்கரைப்பட்டி.சுத்தம் இல்லா சாக்கடை: பழநி பெரியப்பா நகர் 4வது தெருவில் சாக்கடை சுத்தம் செய்வது இல்லை. புதர் மண்டி உள்ளதால் பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களும் உற்பத்தியாகிறது. சாக்கடையை துார் வாரி செடிகளை அகற்ற வேண்டும். -மருதுபாண்டியன், பழநி.குப்பையால் சுகாதாரக் கேடு : திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி கணேஷ் நகர் கோதாவரி தெருவில் குப்பையை அகற்றாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .அப்பகுதி முழுவதும்துார் நாற்றம் வீசுவதால் குப்பையை அகற்ற வேண்டும்.-பத்மநாபன், கணேஷ் நகர்.எரியாத கோபுர விளக்கு : நத்தம்- திண்டுக்கல் நெடுஞ்சாலை,மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேர்வீடு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் பழுதடைந்துள்ளது. இதனால் விபத்த அபாயம் உள்ளது. மின் விளக்கை சீரமைக்க வேண்டும்.-விஜய், நத்தம்.வேகத்தடையால் விபத்து : ஒட்டன்சத்திரம் -மதுரை புதுச்சத்திரம் அருகில் வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசாமல் இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது. வர்ணம் பூச வேண்டும் இல்லை என்றால் வேகத்தடையை அகற்ற வேண்டும்.-கி.ரங்கசாமி கம்பளிநாயக்கன்பட்டி.
21-Feb-2025