ஆற்றில் குதித்த மாணவன் பலி
நிலக்கோட்டை: முத்தாலபுரத்தை சேர்ந்த மருத கருப்பன் மகன் தீபக் கண்ணன் 15. விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். நேற்று வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற போது கூட்டுக் குடிநீர்த் திட்ட கிணற்றில் இருந்து தலைகீழாக குதித்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். விளாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.