| ADDED : ஜூலை 28, 2024 07:07 AM
எரியோடு, : எரியோடு வைவேஸ்புரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. அறக்கட்டளை பொருளாளர் முருகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஊர் பிரமுகர் சுப்பிரமணியன் பாங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி., பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா ஆகியோர் கலாமின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.பழநி: அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பாடல் பாடி முன்னணி வீரர்களின் சாதனைகளில் எடுத்துக் கூறினர். பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் மங்கையர்கரசி கலந்து கொண்டனர்.