உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யுங்க: அரசு அலுவலர் ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம்

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யுங்க: அரசு அலுவலர் ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம்

திண்டுக்கல் : பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் பார்த்த சாரதி தலைமை வகித்தார். செயலர்முகம்மது ரபிக் வரவேற்றார். மாநில செயலாளர் கார்த்திகேய வெங்கடேசன் பேசினார். துணைத்தலைவர் பூமிபாலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், மத்திய செயற்குழு உறுப்பினர் வீரராஜ் பங்கேற்றனர்.தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வுதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர்பொன் இளங்கோ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை