உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மீண்டும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்: டிட்டோ ஜாக் அறிவிப்பு

மீண்டும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்: டிட்டோ ஜாக் அறிவிப்பு

வேடசந்துார்: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ('டிட்டோ ஜாக்') சார்பில் 31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் சென்னை தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.திருச்சியில் 'டிட்டோ ஜாக்' மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். 12 ஆசிரியர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இதில் அரசாணை 243ஐ ரத்து செய்ய கோருவது, தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோருவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி செப்.1ல் மாவட்ட அளவில் வேலை நிறுத்தம் தொடர்பான ஆயத்த கூட்டம் நடத்துவது, செப். 10ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், செப்.29, 30, அக். 1 என மூன்று நாட்கள் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் வி.கோபிநாதன் கூறுகையில் ''டிட்டோ ஜாக்' சார்பில் நடந்த மாநில குழு கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தை செப். 29 முதல் அக்.1 முடிய 3 நாள் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தமாதமும் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை