உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

வேடசந்துார்: ஆத்துமேட்டில் அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெ., 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் பாபுசேட் வரவேற்றார். மாநில பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோபி காளிதாஸ் பேசினர். 2077 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !