உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணப்பலன் கேட்டு முறையீடு: வாக்குவாதம்

பணப்பலன் கேட்டு முறையீடு: வாக்குவாதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் நிலுவை பணப்பலன்களை கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற சிலருக்கு பணப்பலன்கள் வழங்காமல் ரூ.லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளது. இதில் சிலர் இறந்தநிலையில் அவர்களுக்கும் பணப்பலன்கள் வராமல் உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஓய்வு துாய்மை பணியாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி கணக்குபிரிவு அலுவலர்களிடம் முறையிட்டனர். அப்போது துாய்மை பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உடனடியாக பணப்பலன்கள் வழங்குவதாக கமிஷனர் ரவிச்சந்திரன் உறுதியளித்திருந்தார். ஆனால் வழங்காது இழுத்தடித்து வருவதால் நேற்றும் அவர்கள் அலுவலகம் வந்த நிலையில் முறையாக பதிலளிக்காமல் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் அதிகாரிகள் நடந்து கொண்டனர். இதனால் ஆத்திரத்திற்கு உள்ளாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே அலுவலர்கள் 15க்கு மேலானோர் இணைந்து தங்களை தரக்குறைவாக பேசிய ஓய்வு துாய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வடக்கு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை