மேலும் செய்திகள்
ஈஸ்டர் சாம்பல்புதன் வழிபாடு
06-Mar-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் நடந்த சாம்பல் புதன் வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இந்த தவக்காலம் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது. அதன்படி, நேற்று தவக்காலம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி வியாகுல அன்னை சர்ச்சில் பாதிரியார் செல்வராஜ், நெற்றியில் சாம்பலால் சிலுவை பூசி தவக்காலத்தை துவக்கி வைத்தார். அதேபோல், புனித வளனார் சர்ச்சில் மறைமாவட்ட முதன்மை குரு சகாயராஜ் காலையிலும், மாலை 6:30 மணிக்கு ஆயர் தாமஸ் பால்சாமியும் தொடங்கி வைத்தனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.
06-Mar-2025