திண்டுக்கல் : ஆடி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் அபிஷேகம் , சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.ஆடிமாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோயில்,அபிராமி அம்மன் கோயில்,பழநி ரோடு காளியம்மன்,ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன்,நாகல் நகர் மாத புவனேஸ்வரி அம்மன்,ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன்,மகா காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு கூல் ஊற்றி வழிபாடு நடத்தினர். சில கோயில்களில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகங்களும் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காலை முதல் அம்மன் கோயில்களில் குவிய ஆரம்பித்தனர். புதிதாக திருமணமான ஜோடிகள் அம்மனை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். அனைத்து கோயில்களிலும் பூஜைகளில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பழநி ரோடு முருகபவனம் காளியம்மன் கோயிலில் அகில இந்திய ஹிந்து மகாசபை நிறுவனர் ஸ்ரீ.ஜி தலைமையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து பழநி பைபாஸ் ரோடு வழியாக மீனாட்சி நாயக்கன்பட்டி ஸ்ரீ தேவி, கருமாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிக லிங்கத்திற்கு பக்தர்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்தனர். தேசிய துணைத் தலைவர் நாகலெட்சுமி, தேசிய பொதுச்செயலார் சுனில்குமார்,தேசிய துணை பொது செயலாளர் ரெங்கசாமி,தேசிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,தேசிய அமைப்பு செயலாளர் சசிக்குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன்,மாநில தலைவர் கோபிநாத்சித்தர் பங்கேற்றனர்.பழநி: பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாரியம்மன் கோயில், ரெணகாளியம்மன் கோயில், கிரி விதி காளிகாம்பாள் கோயில், அடிவாரம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் : தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. 08 சிவசக்தி யாத்திரை குழு, காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் ஆன்ehக அன்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. காமாட்சி அம்மன் கோயிலில் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் ,பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்து, கூல் வைத்து வழிபட்டனர். விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு மஞ்சள் நீர், பால் அபிஷேகம் நடந்தது. வாலை திரிபுரை சக்திக்கு விசேஷ மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு கூழ் வழங்கல் நடந்தது. சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.