உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் மலையடிவார கிராம மக்கள் நிம்மதி

அய்யலுார் மலையடிவார கிராம மக்கள் நிம்மதி

வடமதுரை : அய்யலுார், புத்துார் மலைப்பகுதிகளில் அடுத்தடுத்து 3 நாட்களாக மழை பெய்ததையடுத்து தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் காட்டு மாடுகள் வருவது நின்றுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.புத்துார் முடிமலை, பண்ணமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. வறட்சியால் நீருற்றுகள் அனைத்தும் வறண்டதால் நீர் தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிக்குகாட்டுமாடுகள் வந்தன.விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர். விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது சில நாட்களாக அடுத்தடுத்து மழை பெய்ததால் மலைகளில் ஆங்காங்கே உள்ள பாறை குழிகளில் நீர் தேங்கி உள்ளன. இதனால் தரைப்பகுதிக்கு காட்டு மாடுகள் இறங்கி வருவது நின்றுள்ளதால் விவசாயிகள், மக்கள் நிம்மதியாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை