உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் பாலாலய பூஜை

சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் பாலாலய பூஜை

நத்தம் : நத்தம் சந்தனகருப்பு சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த பாலாலய பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நத்தம் சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் கல்சிலை அமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா செப்டம்பரில் நடக்க உள்ளது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நேற்று பாலாலய பூஜைகள் நடந்தது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், எஜமான சங்கல்பம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, யாக வேள்விகள், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனக்கருப்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வண்ணப்பூ அலங்கார பூஜைகள் நடந்தது. இதன் பின் கோயில் திருப்பணி வேலைகள் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை