உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

வேடசந்துார்: ஒட்டன்சத்திரம் தாலுகா ஐ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து 26. மார்க்கம்பட்டியில் சலுான் கடை நடத்தி வந்தார். 3 ம் தேதி இரவு பாட்டியை பார்ப்பதற்காக டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்றார். வேடசந்துார் சுள்ளெறும்பு நால்ரோடு அருகே சென்றபோது நுாற்பாலை முன்பாக நிறுத்தி இருந்த கன்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வேடசந்தூர் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ