உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குட்டுப்பட்டி அருவியில் குளிக்க தடை -

குட்டுப்பட்டி அருவியில் குளிக்க தடை -

நத்தம்: -நத்தம் அருகே குட்டுப்பட்டி மலைப்பகுதி அருவியில் குளிக்க தடை-விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.-நத்தம் அருகே குட்டுப்பட்டி மலை உச்சியில் பெரிய மலையூர், சின்னமலையூர்,வலசு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களுக்கு செல்லும் பாதையில் இரண்டு அருவிகள் உள்ளன. சில மாதங்களாக இந்த அருவிகளில் வெளியூர், உள்ளூர் மக்கள் குளித்து வந்தனர்.இந்நிலையில் அருவிகளில் குளிக்க மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவுப்படி நத்தம் வன அலுவலர் ஜெயசீலன் தடை விதித்துள்ளார். அதில், கரந்தமலை காப்புக்காடு மலைபகுதியில் காட்டுமாடுகள் ,வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அருவியில் குளிக்கவும், மது , புகை பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை