உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உஷாராகுங்க: அதிகரிக்கும் பண்டிகை சீட்டு மோசடிகள்: மக்களிடம் அவசியமாகிறது விழிப்புணர்வு

உஷாராகுங்க: அதிகரிக்கும் பண்டிகை சீட்டு மோசடிகள்: மக்களிடம் அவசியமாகிறது விழிப்புணர்வு

மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பண்டிகை சீட்டுகளில் சேர்ந்து ஏமாற்றம் அடைந்ததாக ஏராளமான புகார்கள் வருகிறது. குறிப்பாக பெண்கள் பண்டிகை நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு புது துணிமணிகள், நகைகள் எடுப்பது, பண்டிகை செலவுகளுக்கு என குறிப்பிட்ட தொகையை ஆண்டு முழுவதும் சேமித்து வைத்து அதை பண்டிகை நேரங்களில் பயன்படுத்துவது வழக்கம். இதை பயன்படுத்தி சிட் பண்ட், ஏலச்சீட்டு, தீபாவளி நகை சீட்டு, சேமிப்பு சீட்டு, ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகளும் புதிய புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்கின்றனர். இதில் பலர் எந்த விதமான அரசு அங்கீகாரம் பதிவுகள் செய்யாமல் வாங்கிய பணத்திற்கு ரசீதுகள் கொடுக்காமலும் வாய் மொழி உத்தரவாதங்களை கவர்ச்சியாக கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.போலி நபர்கள், நிறுவனங்களிடம் ஏமாறும் நபர்கள் போலீசில் புகார் கூட செய்ய முடியாத நிலையில் புலம்பி வருகின்றனர். மக்கள் தங்களது சேமிப்பை தொடங்கும் போது பதிவுசெய்யாத தனிநபர் சிட் பண்ட்களை தவிர்க்க வேண்டும். வெளிப்படை தன்மையுடன் சட்ட விதி முறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களை தேர்வுசெய்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம், போலீசாரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை