பா.ஜ., கையெழுத்து இயக்கம்
பழநி : பழநி பா.ஜ., சார்பில் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பழநி கோயில் அடிவாரம் கிரி வீதியில் உள்ள பாத விநாயகர் கோயில் முன் பொதுமக்கள் கையெழுத்து இட பாதகை அமைக்கப்பட்டது. மதுரை கோட்டச் செயலாளர் கதலி நரசிம்ம பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஆனந்த், நகரத் தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஒட்டன்சத்திரம்: நகர பா.ஜ., தலைவர் குமார்தாஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் சசிகுமார், பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்திரமூர்த்தி துவக்கி வைத்தார்.