| ADDED : மே 23, 2024 11:54 PM
கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்து வரும் மலர் கண்காட்சி ,கோடை விழாவில் படகு அலங்காரப் போட்டி நடந்தது.கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி, கோடை விழா நடந்து வருகிறது. இதில் உள்ளாட்சி, சுற்றுலா, தோட்டக்கலை, மீன்வளத்துறை பங்கேற்ற படகு அலங்காரப் போட்டி கொடைக்கானல் ஏரியில் நேற்று நடந்தது. உள்ளாட்சித் துறை முதல் பரிசை பெற்றது. ஆர்.டி.ஓ., சிவராம், கமிஷனர் சத்தியநாதன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சமீபகாலமாக படகு அலங்காரப்போட்டி வெறும் சடங்காகவே நடந்து வருகிறது. துவக்கத்தில் அரசு துறை, தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏராளமான படகுகள் அணிவகுத்த நிலையில் தற்போது சொற்ப எண்ணிக்கை படகுகளுடன் இப்போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலாவது போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் பிற துறை படகுகளும் அணிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.