மேலும் செய்திகள்
சிற்றாற்று ஓடையை மறைத்து நிற்கும் கருவேலம்
31-Aug-2024
வேடசந்துார்: எல்லைப்பட்டி போடிகவுண்டன் குளத்தில் உள்ள கருவேல முட்களை அகற்றி குளத்தை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கல்வார்பட்டி ஊராட்சி எல்லை பட்டியில் உள்ளது போடி கவுண்டன்குளம். 30 ஏக்கர் கொண்ட இந்த குளத்திற்கு ரெங்கமலை கோவிந்த பெருமாள் மலைப்பகுதியிலிருந்து மழை காலங்களில் உருவாகும் நீர் சிற்றோடையாக போடி கவுண்டன் குளத்திற்கு வருகிறது. இக்குளம் நிறைந்து தண்ணீர் தேங்கினால் சுற்றுப்பகுதி விவசாயக் கிணறுகள், போர்வெல்களில் ஒரு ஆண்டுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது . இந்த குளத்தின் கரையில் சரி பகுதி நீளத்திற்கு நீண்ட பாறை உள்ளது. மீதியுள்ள பகுதி துாரத்திற்கு தடுப்பு சுவரை எழுப்பி உள்ளனர். மலையடிவார பகுதியில் அமைந்துள்ள இந்த குளம் தற்போது கருவேல முட்களால் சூழ புதர் காடாக காட்சியளிக்கிறது. குளத்தில் உள்ள கருவேல முட்களை அகற்றி துார்வார வேண்டும். நிலத்தடி நீருக்கு வாய்ப்பு
வி.எம்.வெங்கடேசன், விவசாயி, செம்பாறைப்பட்டி :மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இந்த குளம் நிறைந்தால் மிக ரம்மியமாக இருக்கும். கடந்த காலங்களில் 2, 3 முறை குளம் நிறைந்து மறுகால் போனது. இந்த குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள் ,போர்வெல்களில் நீர் பிடிப்பு கிடைக்கும். தற்போது குளம்முழுவதும் கருவேல முட்கள் நிறைந்து காணப்படுகிறது. நிறைந்தால் செழிப்பு
ஏ.ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர், கல்வார்பட்டி ஊராட்சி :ரெங்கமலை அருகே உள்ள கோவிந்த பெருமாள் மலையில் இருந்து வழிந்து ஓடும் மழை நீர் சிற்றோடையாக போடி கவுண்டன் குளத்திற்கு செல்கிறது. இந்தக் குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவர். கடந்த காலங்களில் இக்குளம் துார்வரப்பட்ட நிலையில் தற்போது கருவேலம் நிறைந்து காணப்படுகிறது. இவற்றை அகற்றி துார் வாரும் பட்சத்தில் குளம் நிறைந்தால் இப்பகுதி செழிப்படையும். கருவேல முட்கள் அகற்றப்படும்
கே.ஜெயச்சந்திரன், ஊராட்சி செயலர், கல்வார்பட்டி ஊராட்சி: 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இந்த குளம் ஏற்கனவே துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகள் முடிந்தால் தான் மீண்டும் சுத்தம் செய்து துார்வார முடியும். அடுத்தாண்டில் கருவேல முட்களை அகற்றி துார்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். குளத்தின் கரையோர பகுதிகளில் பனைமர கன்றுகள் நடப்படும். மேலும் மலையடிவாரப் பகுதி என்பதால் பறவைகளின் நலன் கருதி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என்றார்.
31-Aug-2024