உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் சிக்கிய கன்று; நெகிழ வைத்த பசுவின் பாசப்போராட்டம்

விபத்தில் சிக்கிய கன்று; நெகிழ வைத்த பசுவின் பாசப்போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு ஆர்.எம்.டி.சி. காலனியில் ரோட்டில் திரிந்த கன்று வாகன விபத்தில் சிக்கியதால் , இதன் தாய் பசு பரிதவித்தப்படி கன்றை மீட்க பாசபோராட்டத்தில் ஈடுபட்டது பலரையும் நெகிழ வைத்தது.தாடிக்கொம்பு ரோடு ஆர்.எம்.டி.சி. காலனி மின்மயானம் அருகே வாகன விபத்தில் சிக்கிய நடுரோட்டில் மயங்கி விழுந்தது. அதை சுற்றி சுற்றி வந்த தாய் பசுவானது தனது மூச்சை இழுத்து விட்டபடி கன்று குட்டி முகத்தை நாவால் தடவி அதை எழுப்ப முயற்சித்தது. இதை பார்த்த பெண்கள் கண் கலங்கினர். ஒருவர் அருகிலிருந்த டீக்கடையில் குடிநீர் வாங்கி கன்றுகுட்டியின் வாயில் ஊற்ற கன்றுக்குட்டி உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தது. எழுந்து நடந்த கன்று குட்டியை அரவணைத்த தாய் பசுவானது நாவால் தடவிக் கொடுத்தப்படி உடன் அழைத்து சென்றது. இந்த நெகிழ்ச்சியான இதை பார்த்த பலரும் கன்றுகுட்டி எழுந்து நடக்க வானத்தை நோக்கி கும்பிட்டபடி கடவுளுக்கு நன்றி தெரிவித்து பெருமூச்சு விட்டனர்.பசுவின் பாசப்போராட்டத்தின்போது சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும் மாடு மிரளும் என்பதால் வாகன ஓட்டிகளும் அமைதி காத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி