உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழில் நிறுவனங்களுக்கு விருது பெற அழைப்பு

தொழில் நிறுவனங்களுக்கு விருது பெற அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு ,நடுத்தர தொழில் பிரிவில் 65,000 மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. வேளாண் தொழில் முனைவோர் விருது,மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருதுஉள்ளிட்ட 6 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது. 2020---2021-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள்,awards.fametn.comஎன்ற இணையதளத்தில் வரும் மே 20 ற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழில் ஆணையர்,தொழில் வணிக இயக்குநர் தலைமையிலான உயர்மட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து,விருது பெறும் நிறுவனங்களை தேர்வு செய்யும் என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், எஸ்.ஆர்.மில்ஸ் சாலை, சிட்கோ தொழில் பேட்டை, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரடியாகவோ,gmail.comஎன்ற இ-மெயில், 89255-33943 எண்ணில் சம்பந்தப்பட்டஅலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ