வனத்தில் கேமராக்கள் அமைப்பு
பழநி : பழநி மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் சிறுத்தை, யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க 20 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பழநி காரமடை பகுதி கண்காணிப்பு அறையில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆக்ரோஷமாக நடமாடும் வனவிலங்குகளையும் கண்டறிய முடியும். மனிதர்கள் வித்தியாசமான பொருட்களை எடுத்து சென்றால் அவற்றையும் கண்காணிக்கலாம். இதன் மூலம் வனப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.