உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம்

சீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 2 ல் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதி உலா நடந்தது . ஜூலை 9 ல் திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில் நேற்று மாலை திருத்தேரோட்டம் நடந்தது. இதில் சுவாமி வீற்றிருக்க பக்தர்கள் படம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து ஜூலை 13ல் தெப்பத்திருவிழா , ஜூலை 14ல் ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ