உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 13 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை,மாலை நேரங்களில் சிறப்பு மண்டகப் பணிகளை தொடர்ந்து அன்னம், சிம்மம், கேடயம், கருட, சேஷ, ஆஞ்சநேயர், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்துருளி தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜூலை 19 ல் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து பூ பல்லக்கில் திருத்தம்பதியர் கோலத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.முக்கிய நிகழ்வான திருத்தேர் புறப்பாடு மாலை 4:30 மணிக்கு நேற்று நடந்தது. முன்னதாக வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் சுப்பிரமணியம், தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி முக்கியஸ்தர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி,உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம்,கோயில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் ,பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூலை 22, 2024 21:02

பெருமாளின் திவ்விய தேச கோலங்கள் 1. ஜல சயனம் 2. தல சயனம் 3. பூஜங்க சயனம் 4. உத்யோக சயனம் 5. வீர சயனம் 59 வது திவ்ய தேசம் திருவள்ளூர் 6. போக சயனம் 40 வது திவ்ய தேசம் சித்ரகூடம் சிதம்பரம் புண்டரீகவல்லி தாயார் சமேத கோவிந்த ராஜ பெருமாள் 7. தர்ப சயனம் 105 வது திவ்ய தேசம் திருப்புல்லாணியில் ராமநாதபுரம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ ராமர் தர்ப சயனத்தில் பாம்பணையில் மீது அல்ல காட்சி தருகிறார் 8. பத்ர சயனம் ஆல மரத்து 99 வது திவ்ய தேசம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்தலம் வட பத்ர சாயி ரங்க மன்னார் ஆக ஆல மரத்து இலை சாயியாக என்றும் பத்ர சயனம் 9. மாணிக்க சயனம் 61 வது திவ்ய தேசம் திருநீர்மலை யில் அரங்க நாயகி சமேத ரெங்க நாதராக சதூர் புஜங்களோடு அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாள் நின்று, இருந்து மற்றும் கிடந்து மூன்று கோலங்களில் காட்சி தரு கிறார்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி