| ADDED : ஜூலை 30, 2024 05:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தில் கலெக்டரின் காலில் விழுந்து முறையிட்ட ஹிந்து தமிழர் கட்சி தலைவர் , அலைபேசி டவர் மீது ஏறி போராட்டத்துடன் பல்வேறு பிரச்னை தொடர்பாக 232 பேர் மனு வாயிலாக முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 232 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். இலவச தையல் இயந்திரம் கோரி மனு அளித்த பெண்ணிற்கு உடனடியாக கலெக்டரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் நல அலுவலர் திமுருகேஸ்வரி, நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன் கலந்துகொண்டனர். காலில் வி ழுந்து முறையீடு
மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் கூட்டரங்கிற்கு வந்த ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் திடீரென கலெக்டரின் மேசைக்கு முன்பாக வந்து கலெக்டர் காலில் விழுந்தார். பாதுகாப்பு போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்று மனு வழங்க ஏற்பாடு செய்தனர். அப்போது அவர் கூறியதாவது: நிலக்கோட்டை ஒருத்தட்டு கிராமத்தில் உத்தமநாச்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தை கோயில் பூசாரிகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து நிர்வகித்து வருகின்றனர். 2020ல் காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர் கணேஷ்பிரபு, அவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வி ஆகியோர் கோயில் நிலங்களை ரூ.1.05 லட்சத்திற்கு வாங்கினர். கோயிலுக்கு சொந்தமான சொத்து என தெரிந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கி உள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதால் தன்பெயரில் சொத்து இருந்தால் பிரச்னைகள் எழும் என தெரிந்து தனது மாமனாரான பழனிச்சாமிக்கு 2021ல் கிரயமாக எழுதி கொடுத்துள்ளனர். அரசின் முன் அனுமதி பெறாமல் கோயில் நிலத்தை கிரயம் பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை செல்வி உட்பட 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜூலை 8ல் கலெக்டர் உட்பட பல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டரின் காலில் விழுந்து நடவடிக்கை எடுங்க என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். டவர் மீது ஏறி போராட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கூட்ட அரங்குக்கு செல்லாமல் கலெக்டர் அலுவலக கட்டடத்தின் பின்புறம் இருந்த அலைபேசி கோபுரம் மீது தேசிய கொடியுடன் ஏறினார்.கோபுரத்தின் உச்சிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணி போலீசார் கலெக்டரிடம் அழைத்து செல்கிறோம் என்ற தெரிவிக்க அவராக இறங்கினார். விசாரணையில் அவர், பழநி அருகே கோதைமங்கலத்தை சேர்ந்த பாலமுருகன் 45,என்பதும், சித்தையன்கோட்டையில் பாலமுருகன் தாத்தாவுக்கு சொந்தமா நிலம் வேறு நபர்களுக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்துவிட்டு அவரின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக 20 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், இப்பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்காததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலைபேசி கோபுரத்தில் ஏறியது தெரியவந்தது. அவரை எச்சரித்த போலீசார் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.