| ADDED : மே 09, 2024 06:15 AM
திண்டுக்கல்: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரி கனவு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி ஜி.டி.என்., கல்லுாரியில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் எஸ்.பி.,பிரதீப் முன்னிலையில் இன்று நடக்கிறது. காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 3:30 மணி வரை நடக்கிறது. கல்விக்கடன்கள், உதவித்தொகைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள்,கல்வியாளர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடக்கிறது. உயர் கல்வி தொடர்பாக மாணவர்களை ஊக்குவித்தல், பொறியியல், மருத்துவம், கலை,அறிவியல், வணிகம்,கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவுள்ளது.