உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா

திண்டுக்கல்,: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்கம் இணைந்து சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் .புருசோத்தமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி கலந்து கொண்டு 105 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சேலை, வளையல், துண்டு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினார். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.டாக்டர்கள் ஆர்த்தி, மீனா குமாரி மற்றும் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர். ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் பவன்ஜி பட்டேல், செல்வகனி, ஆனந்தி, சுமதி, காயத்ரி, அரசன் சண்முகம், ரமேஷ் பட்டேல், நாதன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.பட்டிவீரன்பட்டி: ஆனந்த மகள் என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பரணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜநிலா முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜயா வரவேற்றார்.பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் சியாமளா, சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் வனிதா தங்கராஜன் கர்ப்பிணிளுக்கு வளையல் அணிவித்து ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினர். மாவட்ட நிர்வாகி நஜ்முதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்