| ADDED : ஜூலை 22, 2024 05:37 AM
திண்டுக்கல்: ''ஹிந்து அமைப்புகளை ஒன்று திரட்டி விரைவில் மாநாடு நடத்துவோம்'' என,ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 50 ஆயிரம் கைழுத்துகளை பெற வேண்டுமென்ற இலக்கோடு இயக்கத்தை தொடங்கினோம். இதுவரை திண்டுக்கல் நகர் பகுதிகளில் 30 ஆயிரம் கையெழுத்துக்கள் பெற்றுள்ளோம். பொதுமக்களிடம் அதிக ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, முஸ்லீம்,கிறிஸ்தவ மக்கள் ஆதரவு அளித்து கையெழுத்திட்டுள்ளனர். ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வாரம் கையெழுத்து இயக்கம் தொடரும். 50 ஆயிரம் இலக்கை அடைவோம். மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டையில் பிரதிஷ்டை செய்ய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆன்மிக அமைப்புகள்,ஹிந்து அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி விரைவில் மாநாடு நடத்த உள்ளோம் என்றார்.திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் திண்டுக்கல்லில் நேற்று கடைசிநாள் கையெழுத்து இயக்கம் நடந்தது.