உள்ளூர் செய்திகள்

கொடையில் தொடர் மழை

கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நேற்று காலை 11:00 மணியிலிருந்து பெய்யத் துவங்கிய மழை மாலை 6:00 மணி வரை நீடித்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. மழையால் கீழ்மலைப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இவ்விரு மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பயணியர் விடுதிகளில் முடங்கினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை