உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேனர்களின் உறுதித்தன்மை ஆய்வுக்கு மாநகராட்சி முடிவு

பேனர்களின் உறுதித்தன்மை ஆய்வுக்கு மாநகராட்சி முடிவு

திண்டுக்கல் : மும்பை சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் அனுமதி பெற்று வைத்திருக்கும் பேனர்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து நோட்டிஸ் வழங்கவும்,அனுமதி பெறாத பேனர்களை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மும்பையில் வீசிய சூறாவளி காற்றில் ரோட்டோரத்திலிருந்த ராட்சத பேனர் சரிந்து விழுந்து 8க்கு மேலானோர் பலியானர். பலரும் காயமடைந்தனர். இதையடுத்து ரோட்டோரங்களில் உள்ளாட்சிகளின் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அதன் உரிமையாளர்களிடமிருந்து அறிக்கை பெற வேண்டும். அனுமதி இல்லாத பேனர்களை உடனே அகற்ற தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் நகர் முழுவதும் ஆய்வு செய்து அனுமதி பேனர்களின் விபரங்களை சேகரித்து அவற்றின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர். அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே சம்பந்தபட்டவர்கள் அகற்றுவதோடு, இல்லையெனில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை