மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனியில் அடுக்குமாடி கட்டடம் அமைக்க வேண்டும். அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி 50க்கு மேலான துாய்மை பணியாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்க கலைந்தனர். பி.வி.தாஸ் காலனியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக துாய்மை பணி செய்யும் நாங்கள் குடியிருக்கிறோம். வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். இருந்தபோதிலும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வீடுகளை இடித்து விட்டு மாநகராட்சி கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க உள்ளோம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இப்பணியை நிறுத்த வேண்டும் என்றனர்.