உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் அணிவகுப்பு:பயணிகள் அச்சம்

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் அணிவகுப்பு:பயணிகள் அச்சம்

திண்டுக்கல்:திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் மாடுகள் அணிவகுத்து சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்கள் உள்ளது. இவ்வழித்தடத்தில் தினமும் 100க்கு மேலான ரயில்கள் வட தென் மாநிலங்களுக்கு செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் ரயில்வே ஸ்டேஷனில் குவிகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென 10க்கு மேலான மாடுகள் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் புகுந்து அணிவகுத்தபடி வரிசையாக சென்றது. இதைப் பார்த்த பயணிகள் அச்சமடைந்தனர். மாடுகளை ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேற்ற ரயில்வே நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவைகளாகவே தாமாக நடந்து வெளியேறியது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் கால்நடைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி