மேலும் செய்திகள்
விதை உற்பத்தி பயிற்சி
30-Aug-2024
திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தொழிற்சாலைகளில் எற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தொழிலக பாதுகாப்பு ,சுகாதார இயக்குநர் ஆனந்த் வழிகாட்டுதல், திருச்சி தொழிலக பாதுகாப்பு ,சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் அறிவுறுத்தல்படி திண்டுக்கல் மாவட்ட பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்,தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நாகா லிமிடெட் புட்ஸ் தொழிற்சாலை கூட்ட அரங்கில் நடந்தது. 25 க்கு மேற்பட்ட உரிமையாளர்கள்,தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது.திருச்சி தொழிலக பாதுகாப்பு சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகழேந்தி, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு ,சுகாதார துணை இயக்குநர் அமர்நாத், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் பேசினார். தொழிலக பாதுகாப்பு சுகாதார உதவி இயக்குநர் மணிமாறன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டது.
30-Aug-2024