உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: ஒட்டன்சத்திரம் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: ஒட்டன்சத்திரம் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பட்ஸ் கல்வி குழுமம் பழநியாண்டவர் மைதானத்தில் நடத்திய 16 வயதுக்குட்பட்ட மாவட்ட அளவிலான டி.திருமலைராஜ் நினைவு காலிறுதி கிரிக்கெட் போட்டியில் ஒட்டன்சத்திரம் டி.திருமலைராஜ் அகாடமி அணி வெற்றி பெற்றது.பழநி யுவராஜ் கிரிக்கெட் அகாடமி அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து 115ரன்கள் மட்டுமே எடுத்தது. தருண் வெங்கடேஷ் 35ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் டி.திருமலைராஜ் கிரிக்கெட் அகாடமி அணி 14 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 116ரன்கள் எடுத்து வென்றது. ஆசிப் 45, ஜெயயோனாஸ் 43 ரன்கள் எடுத்தனர்.ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா எம்.ஹெச்.எஸ்.எஸ்.அணி 20 ஓவரில் 52 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கன்வால் கிஷோர் 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்.கிரிக்கெட் அகாடமி அணி 3.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53ரன்கள் எடுத்து வென்றது. தீபன் 31(நாட்அவுட்) ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 25 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ஹெமென்த் 45, தஷ்வின் 37, ஸ்ரீஹரி 26ரன்கள், பிராஜன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்சு கிரிக்கெட் அகாடமி அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழந்து 139ரன்கள் மட்டுமே எடுத்தது. நிதர்சன் 45, சசிக்குமார் 33ரன்கள், ஹெமென்த் 3 விக்கெட் எடுத்தனர். ஒட்டன்சத்திரம் பட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 25 ஓவரில் 4 விக்கெட் இழந்து 152ரன்கள் எடுத்தது. ஜெய் சிவஸ்ரீ 61, அஸ்ரங்கா 40ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் கிரிக்கெட் அகாடமி 23.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 153ரன்கள் எடுத்து வென்றது. விசாகன் 40, நரேன் 38ரன்கள் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ