உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர் இறப்பு

மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர் இறப்பு

திண்டுக்கல்:திருச்சியை சேர்ந்தவர் வில்சன். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் அலுவலக உதவியாளராக உள்ளார். திண்டுக்கல் சோலைக்கால் பகுதியில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்றும் வழக்கம் போல் வில்சன்,அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டார். மதியம் 4:00 மணிக்கு திடிரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வில்சன்,இறந்ததாக தெரிவித்தனர். வடக்கு போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சக ஊழியரான வில்சன்,இறந்ததால் கவலையடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ