உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேவை சுற்றுலா வரைபடம்; பயணிகள் எதிர்பார்ப்பு

தேவை சுற்றுலா வரைபடம்; பயணிகள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட ஏதுவாக வரைபடம் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்கள் குறித்து இணையத்தில் அறிந்து வரும் பயணிகள் நகருக்கு வந்தவுடன் குழப்பமடைகின்றனர். இதற்காக துவக்கத்தில் பஸ்ஸ்டாண்ட் ,பிரையன்ட் பூங்கா பகுதியில் சுற்றுலா வழிகாட்டி வரைபடம் பதாகை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வாறான பதாகை பிரையன்ட் பூங்கா பகுதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. சுற்றுலா பகுதிகளை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பயணிகள் கூடும் சந்திப்பு பகுதியில் சுற்றுலா வழிகாட்டி வரைபடம் பதாகை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை