உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அலைபேசி திருடியவர் கைது

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அலைபேசி திருடியவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளியை பார்க்க வந்தவரின் அலைபேசியை திருடிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பழநி நெய்க்காரப்பட்டி சேர்ந்தவர் பத்ரகாளி 34. இவரது தாய் சண்முகவள்ளி 65, சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பத்திரகாளி தன் தாயை பார்ப்பதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது தனது உடமைகளை தாய் படுத்திருந்த படுக்கையின் அருகில் வைத்துவிட்டு ஓய்வெடுத்தார். இவர்கள் வசந்த நேரத்தில் தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்த பிரபல அலைபேசி திருடன் முருகன் 50, பத்ரகாளியின் அலைபேசியை மருத்துவமனைக்குள் புகுந்து திருடி தப்பினார். வடக்கு போலீசார் வழக்கு பதிவு நேற்று இரவு முருகனை கைது செய்து அலைபேசியை மீட்டனர். தொடர்ந்து விசாரணையில் முருகன், தேனி மாவட்டத்திலும் இதேபோன்று அலைபேசியை மட்டும் குறிவைத்து திருடி போலீசில் சிக்கி பல வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ