தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்
திண்டுக்கல் : தெற்காசிய இளநிலை தடகளப் போட்டிகயின் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற ஜித்தீன் அர்ஜூனனுக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்காசிய இளநிலை தடகளப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் திண்டுக்கல் எஸ்.எம்.பி., மெட்ரிக்., பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் சந்திரசேகர் - - சுகன்யா தம்பதி மகன் ஜித்தீன் அர்ஜூனன் நீளம் தாண்டுதலில் 7.61 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார். நேற்று திண்டுக்கல் வந்த அவருக்கு ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது.