உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் நிற்கும் வாகனங்களால் இடையூறு

ரோட்டில் நிற்கும் வாகனங்களால் இடையூறு

பண்ணைக்காடு : கொடைக்கானல் - பண்ணைக்காடு ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.பண்ணைக்காடு பேரூராட்சியில் ஆலடிப்பட்டி, ஊரல் பட்டி, பேரப்பட்டி மெயின் ரோட்டோரங்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.வத்தலகுண்டு - கொடைக்கானல் செல்லும் மெயின் ரோடாக உள்ள நிலையில் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களும் காலை, மாலையில் செல்லும் பள்ளி வேன்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல் போக்குவரத்து இடையூறில் சிக்கிக் தவிக்கின்றன. பேரூராட்சி நிர்வாகம் ரோட்டில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தாண்டிக்குடி போலீசாரும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் கவனிப்பு பெற்று கண்டுகொள்வதில்லை. நாள்தோறும் இது போன்ற பிரச்னையால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பண்ணைக்காட்டை கடக்க முடியாமல் அவதியடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ