உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தை உணராது பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம்

விபத்தை உணராது பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம்

பராமரிப்பு இல்லாத பூங்காஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னகுளம் தெற்கு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி வீணாகிறது. சிறுவர்கள் விளையாடவும், நடை பயிற்சி செய்யவும் வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மயில்சாமி ஒட்டன்சத்திரம்.பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம்திண்டுக்கல்லில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே செல்கின்றனர் .இதனால் விபத்து அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அறிவுறுத்த வேண்டும். விஷ்ணு, திண்டுக்கல்................--------சேதமடைந்த மின்கம்பம்பாடியூர் சொக்கலிங்கபுரம் பகுதியில் மின்கம்பம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் ஆபத்துடன் உள்ளது. உடைந்து விழும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவக்குமார், பாடியூர்....................--------சாலையில் ஆபத்தான பள்ளம்வேம்பார்பட்டியிலிருந்து செடிப்பட்டி செல்லும் சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். சாலையை பராமரிக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேசன்,---------வேம்பார்பட்டி.......................குப்பையை அள்ளாது தீவைப்புதிண்டுக்கல்- பழைய கரூர் ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பையை அள்ளாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புகை மண்டலம் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும்.ரஞ்சித், திண்டுக்கல்...................---------பிளாஸ்டிக் குப்பையால் நோய்திண்டுக்கல் வேடப்பட்டி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது .இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. பிளாஸ்டிக் கலந்த குப்பையுடன் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது .மணிராஜ், திண்டுக்கல்.........--------அழிந்த பெயர் பலகைதிண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அருகே பெயர் பலகை அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.அழிந்துள்ள பெயர் பலகையால் தெரு பெயர் தெரியாமல் பலரும் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக்க வேண்டும். ஜெகதீஷ், திண்டுக்கல்..............----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ