உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்மாய் கரை சேதம் விவசாயிகள் புகார்

கண்மாய் கரை சேதம் விவசாயிகள் புகார்

நிலக்கோட்டை: வத்தலக்குண்டு அடுத்த உச்சப்பட்டி கண்மாய் கரையை உடைத்து சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். எழுவனம்பட்டி உச்சப்பட்டி கண்மாய் 300 குடும்பங்களுக்கு, 100 ஏக்கர் நிலத்திற்கு நீர் ஆதாரமாகவும் விளங்கியது. இக்கண்மாய் கரையை தனிநபர் ஒருவர் சேதப்படுத்தி அவரது விவசாய நிலத்திற்கு செல்ல பயன்படுத்தி வருகிறார். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதி விவசாயிகள், உச்சப்பட்டி கண்மாய் கரையை உடைத்து சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட கரையை சரி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்