உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முருங்கைக்கு இல்லை போதிய விலை கிடைக்காமல் விரக்தியில் விவசாயிகள்: அவசியம் குறைந்தபட்ச ஆதார விலை

முருங்கைக்கு இல்லை போதிய விலை கிடைக்காமல் விரக்தியில் விவசாயிகள்: அவசியம் குறைந்தபட்ச ஆதார விலை

மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. குறிப்பாக காய்கறி வகைகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. விளைந்த காய்கறிகளை விற்பதற்கு ஏதுவாக ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு சீரான விலை எப்பொழுதும் கிடைப்பதில்லை. விளைச்சல் மிகுந்த நாட்களில் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவது உண்டு.காய்களை பறித்தெடுக்கும் கூலி அதிகமாக உள்ளதால் விலை குறைவான நாட்களில் காய்கறிகளை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விடும் நிலையும் தொடர்கிறது. சில விவசாயிகள் விலை போகாத காய்கறிகளை தெருக்களில் கொட்டிச் செல்வதும் அடிக்கடி நடந்து கொண்டுதான் உள்ளது.விவசாயிகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முருங்கை அதிகமாக விளையும் நாட்களில் கிலோ ரூ.10 க்கும் கீழ் வந்துவிடுகிறது. இந்த விலையானது காய்கறி பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடி ஆவது இல்லை.விவசாயிகள் ஒரே நேரத்தில் ஒரே வகையான காய்கறிகளை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நிலையில் விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்தினால் மிகவும் குறைந்த விலைக்கு தான் விற்க வேண்டிய நிலை உள்ளது. இதனை போக்க மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்க விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.இதோடு இவர்களுக்கு தோட்டக்கலை துறையும் போதிய ஆலோசனை வழங்க வேண்டும்.இதை மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை