உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை பூங்காக்களில் கட்டணம் உயர்வு

கொடை பூங்காக்களில் கட்டணம் உயர்வு

கொடைக்கானல்:கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை பூங்காக்களில் நேற்று முதல் பார்வையாளர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை , மலை பயிர்கள் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பூங்காக்களில் 15 ஆண்டுகளாக ஒரே முறையான கட்டணம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கட்டணங்களை மறுசீராய்வு செய்து கட்டண உயர்வை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இதன்படி கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது பெரியவர்களுக்கு ரூ. 50, சிறுவர், மாணவர்களுக்கு ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது போல் இங்குள்ள செட்டியார் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்பட்ட நிலையில் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர், மாணவர்களுக்கு ரூ. 20 வசூலிக்கப்படுகிறது. இக்கட்டண உயர்வு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ